×

பென்ஷன் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் வட்ட மாநாடு ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.  விவசாயி என்.நந்தகோபால் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் என்.சாரங்கன், அரசு ஓய்வூதியர் சங்க நிர்வாகி தென்னரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் கே.நேரு நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். பிர்காவிற்கு இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் வருடம் முழுவதும் செயல்பட உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும். 60 வயது கடந்த அனைவருக்கும் பென்ஷன் வழங்கவேண்டும். உரம், விதை, பூச்சி கொல்லி மருந்து மானிய விலையில் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், வட்டத்தலைவராக கே.சம்பத், செயலாளராக கே.நந்தகோபால், பொருளாளராக ஜி.ஆனந்தன் உள்ளிட்ட 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வி.சுகுமார், வி.பச்சையப்பன், எல்.ரங்கநாதன், செல்வகணபதி, ஏ.ரங்கநாதன், செல்வி, எம்.ஜோதி, எஸ்.குமார், கே.தயாளன், எல்.நீலகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Farmers' Association Conference , To provide pension: Resolution at the Farmers' Association Conference
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை...