×

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய கோரிய நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய கோரிய நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான் சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, காசி விஸ்வநாத திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேத கோபலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாக கூறி பூங்காவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2021ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மனுவில், குயின்ஸ்லேண்ட் பூங்கா அமைந்துள்ள நிலம் கோவில்களுக்கு சொந்தமான நிலம் அல்ல என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிலம் வருவாய்துறைக்கு சொந்தமானதா? அறநிலையத்துறைக்கு சொந்தமானதா? என்பது தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி, நிலம் தொடர்பான விவகாரம் நிலுவையில் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Tags : Court ,Queensland Amusement Park , Queensland Amusement Park, Notice, iCourt
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...