சென்னையில் சிறார்கள் வாகனம் ஒட்டிய புகாரில் 525 வழக்குகள் பதிவு: போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் சிறார்கள் வாகனம் ஒட்டிய புகாரில் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு சோதனை நடத்தினர்.

அப்போது 18 வயதுக்கு குறைவான வாகன ஓட்டிகளை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்தனர். சிறார்கள் ஒட்டிய வாகனங்களில் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், சிறார்களிடம் இருந்து உறுதி மொழி கடிதமும் பெறப்பட்டது.

மேலும் வாகனம் வாகனம் ஒட்டிய சிறாருக்கும், அவர்களது பெற்றோக்கும் அறிவுரைகளுக்கும் வழங்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தார்.

Related Stories: