×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு; ஜூலை 3ல் நாமக்கல்லில் நடைபெறுகிறது: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 3ம் தேதி நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு, திமுக முதன்மைச் செயலாளரும் -  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 3.7.2022 அன்று (ஞாயிறு), காலை 9:30 மணி முதல் மாலை 5 மணிவரை நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டை, நாமக்கல்லில் நடைபெறும். இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : President ,Djagar BM K. ,Urban Local Representatives Conference ,Stalin ,Namakkal , DMK Local Government Representatives Conference chaired by MK Stalin; Held at Namakkal on July 3: Thuraimurugan Announcement
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...