×

மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்!: கட்சியை அழித்துக் கொண்டிருப்பதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கண்டன முழக்கம்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெருமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18ல் மீண்டும் நடைபெறும் என கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் வருகை - எடப்பாடி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு?

ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வரவுள்ள நிலையில் பொதுக்குழு தீர்மானம் குறித்த ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வருவதை அறிந்து கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை என ஜெயக்குமார் பதில் அளித்தார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வரும் தகவலை அறிந்ததும் கூட்டத்தில் இருந்து சி.வி.சண்முகம் அவசரமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதி நடைபெறும் என பேட்டி அளித்த ஜெயக்குமார் அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். ஏற்கனவே சி.வி.சண்முகம் புறப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மற்றும் வளர்மதியும் கட்சி அலுவலகத்தில் இருந்து சென்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கூண்டோடு வெளியேறியதாக தகவல் வெளியானது.

ஜெயக்குமார் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்:

கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது கட்சியினரே தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் புறக்கணித்த நிலையில் ஜெயக்குமாரின் கார் மீது பன்னீர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.


Tags : AIADMK ,former minister ,Jayakumar , Jayakumar, car, assault, O.P.S. Supporters
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...