விஸ்வரூபம் எடுக்கும் கோஷ்டி மோதல்!: 3வது நாளாக ஓ.பி.எஸ். ஆலோசனை..அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர திட்டமா?

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் உடன் சந்தித்து வருகின்றனர். வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து விவாதிகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக கட்சி அலுவலகத்திலும் ஆலோசனை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர திட்டமா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு வதந்தி பரபரப்படுவதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார். அதிமுகவில் கடும் குழப்பம் நிலவும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என சேலத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடி தரப்பு தொடர்ந்து ஒற்றைத் தலைமைக்காக குரல் கொடுப்பதால் அதிமுகவில் குழப்பம் அதிகரிக்கிறது. இரட்டைத் தலைமை தொடரும் என வைத்தியலிங்கம் அறிவித்த நிலையில் இன்றும் பல இடங்களில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை:

இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள  தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, பா.வளர்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழு 23ம் தேதி கூடும் நிலையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: