×

பந்தலூர் காவயலில் குட்டியுடன் உலா வருகிறது ஆபத்தை உணராமல் செல்போனில் யானையை படம் எடுக்கும் வாலிபர்கள்

பந்தலூர் : பந்தலூர் சுற்றுவட்டார  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் உலா வருகின்றன. யானைகளை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளால்  பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.

 நேற்று முன்தினம் மழவன்  சேரம்பாடி காவயல் டேன்டீ பகுதியில் குட்டியுடன் யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்தது.இதனை பார்த்த வாலிபர்கள் சிலர், ஆர்வமிகுதியால் யானையை செல்போனில் படம் எடுத்தனர். விபரீதம் ஏற்படும் முன்பு வனத்துறையினர் யானையை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.யானைகளை செல்போனில் படம் எடுத்தால் அது ஆக்ரோஷமாகி தாக்கிவிடும் என இப்பகுதி மக்கள் வாலிபர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Bandalur ,Kavail ,Wolfers , Pandalur, Forest Elephant,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா