×

கோத்தகிரி அருகே கூக்கல் தொரையில் வெளுத்து வாங்கிய கனமழை காட்டாறு போல கரைபுரண்ட வெள்ளம்

கோத்தகிரி :  நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஊட்டி மற்றும் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்தது.இதில் விவசாயம் அதிகம் செய்யக்கூடிய கூக்கல்தொரை பகுதியில் கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், மலைப்பூண்டு மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நேற்று பெய்த மழை சுமார்3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த நிலையில் விவசாய நிலம், சாலை, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டதுபோல் காட்சியளித்து.

இதுமட்டுமல்லாமல் கூக்கல்தொரை பகுதிகளை சுற்றியுள்ள மசகல், தீனட்டி மற்றும் கோத்தகிரிக்கு செல்லக்கூடிய மக்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. அதிக அளவு மழை பெய்து நிலையில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் நீரில் மூழ்கின.

மலைப்பாதையில்  இருந்து சாலைகளுக்கு கல் மற்றும் மண் அரித்து வரப்பட்டு பஜார் பகுதியில் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் ஒரு சில வாகனங்கள் நீரில் மூழ்கின.
மக்களே தேங்கிய நீரை அப்புறப்படுத்தினர்.

Tags : Kookal ,Gothagiri , Kotagiri,Floods, Heavy Rains
× RELATED வெயிலுக்கு இங்கே வேலை இல்லை… பனியில்...