×

சீர்காழி அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை!: கந்துவட்டி சட்டத்தின் கீழ் 2 பேர் கைது.. தலைமறைவான ஒருவருக்கு போலீஸ் வலை..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அதிக வட்டிக்கு கந்துவட்டி கொடுத்த 2 பேர் கந்துவட்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சீர்காழி அருகே கடனாக கொடுத்த பணத்தை கேட்டதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கூலி தொழிலாளியான இவர், அதே கிராமத்தை சேர்ந்த கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோருடன் தனித்தனியாக ரூபாய் 35 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடன் கொடுத்த மூவரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியிடம் பணத்தை கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சுந்தரமூர்த்தியின் மனைவி கமலி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கந்துவட்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.


Tags : Debt, debt harassment, worker suicide
× RELATED குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு...