×

28 ஆண்டுகளில் முதல்முறை: அமெரி்க்க பெடரல் வங்கி 0.75% வட்டியை உயர்த்தியது : இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சரிய வாய்ப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தி இருப்பதால் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பணவீக்கம் 8%க்கும் மேல் உயர்த்துதல் பெடரல் ரிசர்வ் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு நடவடிக்கையால் ஏற்கனவே இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : US Federal Bank , US Federal Reserve, Indian Stock Exchange, Foreign, Investments
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...