திருமணம் முடிந்ததால் படத்தில் நடிக்க நயன்தாரா புது கண்டிஷன்

சென்னை: திருமணம் முடிந்த கையோடு படங்களில் நடிக்க புதிய கண்டிஷன் போட்டு வருகிறார் நயன்தாரா.7 வருடமாக காதலித்து வந்த நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் கேரளாவுக்கு சென்று தனது பெற்றோரிடம் நயன்தாரா ஆசி பெற்று வந்தார். விரைவில் தேனிலவுக்கு தம்பதி வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். இந்நிலையில் புதிய படங்களில் நடிப்பதற்கு சிலரிடம் நயன்தாரா கதை கேட்டாராம். அப்போது படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், 6 நாட்களுக்கு மேல் தொடர்ந்து ஷெட்யூல் நடக்கும்படி கால்ஷீட் தர மாட்டேன் என இரண்டு நிபந்தனைகளை நயன்தாரா போட்டிருக்கிறாராம். இதை கேட்டு இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் முன்னணி இடத்துக்கு வந்தது முதல் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்துவிட்டார் நயன்தாரா. அதனால் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என அவர் சொல்வதையும் கேட்க இயக்குனர்கள் தயாராகிவிட்டனர். ஆனால் தொடர்ந்து பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒரே கட்டமாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என அவர் சொல்வதை இயக்குனர்கள் ஏற்க தயங்கி வருகின்றனர். படத்தை சீக்கிரம் முடிப்பதற்காக 15 நாட்கள், 20 நாட்கள் என ஷெட்யூல் போடப்படுகிறது. அப்படி இருக்கும்போது, தொடர்ந்தார்போல் 15 நாள் அல்லது 20 நாட்கள் நடித்துதான் ஆக வேண்டும். அதை ஏற்க முடியாது என நயன்தாரா சொல்வதில் நியாயம் இல்லை என இயக்குனர்கள் கொதிக்கின்றனர்.

Related Stories: