காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும்: மாநாட்டில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் வட்ட மாநாடு ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், என்.நந்தகோபால் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் என்.சாரங்கன், அரசு ஓய்வூதியர் சங்க நிர்வாகி தென்னரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் கே.நேரு நிறைவுரையாற்றினார். காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். பிர்காவிற்கு இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் வருடம் முழுவதும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது கடந்த அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும். உரம், விதை, பூச்சி கொல்லி மருந்து மற்றும் விவசாய கருவிகள் மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Related Stories: