செய்யூர் தாலுகா ஜமாபந்தி நிறைவுநாளில் 219 பயனாளிகளுக்கு சான்றிதழ்: ஆர்டிஓ சரஸ்வதி வழங்கினார்

செய்யூர்: செய்யூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவுநாளான நேற்று 219 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 31ம் தேதி ஜமாபந்தி முகாம் துவங்கியது. கடந்த, பத்து நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் செய்யூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம்,  குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர். அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 953 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 219 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், நேற்று ஜமாபந்தி முகாம் நிறைவடைந்ததை தொடர்ந்து 219 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் யோகாம்பிகை, கவுன்சிலர் மோகனா கோபிநாத், செய்யூர் வட்டாட்சியர் சகுந்தலா, தனி வட்டாட்சியர் சரவணன், வட்ட துணை ஆய்வாளர் மகாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பரவதம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிவண்ணன் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: