தமிழ் வளர்ச்சி துறை நடத்திய பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: செங்கை மாவட்ட கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், அம்பேத்கரின்  பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே  பேச்சு போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைப்பெற்றது. இதில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5000ஐ  செங்கல்பட்டு, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி  கு.கலையரசி, 2ம் பரிசுத்தொகை ரூ.3000ஐ அனகாபுத்தூர், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ம.விஜயலட்சுமி  மற்றும் 3ம் பரிசுத்தொகை ரூ.2000ஐ  திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி  செ.தீபிகா  பெற்றுள்ளனர்.

மேலும், அரசு பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000  பழைய தாம்பரம், நகராட்சி அரசு உயர்நிலை பள்ளியை சேர்ந்த  மாணவி கு.நந்தினி தேவி  மற்றும் கூவத்தூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி  அ.கலைவாணி ஆகியோரும் பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், முதல் பரிசுத்தொகை ரூ.5000 செங்கல்பட்டு, அரசு சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி வெ.பிரியதர்ஷினிக்கும், 2ம் பரிசுத்தொகை ரூ.3000ஐ காட்டாங்கொளத்தூர், எஸ்.ஆர்.எம் சட்ட கல்லூரியை  சேர்ந்த  மாணவன் ச.யாசர் அரபாத்துக்கும், 3ம் பரிசுத்தொகை ரூ.2000 செங்கல்பட்டு எஸ்.டி.என்.பி. மகளிர் வைணவ கல்லூரியை சேர்ந்த மாணவி வெ.கோ.ராகவிக்கும் கிடைத்தது.  வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் பரிசுக்கான காசோலை  மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Related Stories: