திருமலை பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிழம்பி கிராமத்தில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. இதில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் சாய்ராம், செயலாளர் டி.மாதவன், பொருளாளர் ம.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘உடற்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார்.முன்னதாக, கல்லூரி முதல்வர் வரவேற்றார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் நன்றி கூறினார்.

Related Stories: