அரசு நடுநிலை பள்ளியில் அமைச்சர் ஆய்வு

ஆவடி: ஆவடி காமராஜர் நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று காலை பகல் 9.30 மணியளவில் அமைச்சர் ஆவடி நாசர்  திடீரென வந்தார். தலைமை ஆசிரியர் அறை, கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான பாடபுத்தகங்கள் சேமிப்பு அறை, கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடங்களை இடித்து அகற்றும்படி அறிவுறுத்தினார். அப்போது அரசு பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு, காவலர் பற்றாக்குறை காரணமாக லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருடு போவதாக தலைமை ஆசிரியர் அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். பின், ஆசிரியர்களிடம் குறைகளைக்கேட்டறிந்தார். தலைமை ஆசிரியர் வினோத்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். ஆய்வின்போது அமைச்சருக்கு சல்யூட் செய்த மாணவர்களுக்கு மீண்டும் சல்யூட் வைத்து அமைச்சர் ஆவடி நாசர் உற்சாகப்படுத்தினார்.

Related Stories: