குடிநீர் வாரியம் சார்பில் தூர்வாரும் பணி தீவிரம்: மோகன் எம்எல்ஏ துவக்கினார்

அண்ணாநகர்: அண்ணாநகர் குடிநீர்வாரியம் சார்பில், பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் கட்டமைப்பு முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிளை நேற்று காலை எம்.கே.மோகன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், `குடிநீர் குழாயில் சுத்தமான தண்ணீர் வருகிறது’ என்று தெரிவித்தனர். அப்போது, அண்ணாநகர் 8வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜெயபிரகாஷ், துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஜெயபிரகாஷ் கூறும்போது, `பருவமழை முன்னிட்டு, அண்ணாநகர் 8வது மண்டலம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பையை அகற்றுதல், கால்வாய்களை சரிசெய்வது, சாக்கடைகளை தூர்வாருவது போன்ற பணிகள் நடக்கிறது. சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: