திருவாலங்காடு ஒன்றியத்தில் மின்கம்பங்களை சீரமைக்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் மின்கம்பங்களை சீரமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடல்வாடி நார்த்தவாடா கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஐந்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளது. தற்போது இந்த கம்பங்கள் அனைத்தும் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. பல மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பழைய மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பலமுறை திருவாலங்காடு மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, இந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.இதுபோல், திருவாலங்காடு, மணவூர் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள பழையனூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இவற்றை குழந்தைகள்கூட தொடுகின்ற உயரத்தில்தான் செல்கிறது. எனவே செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், திருமழிசை கோட்ட பொறியாளர், திருவாலங்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோர் உடனடியாக மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: