பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவராக ஏ.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ.நாராயணன் தலைவராகவும், அலுவல் சார் உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக அக்ரி கா.பசுமைவளவன், எம்.அந்தோணி ஸ்டீபன், எஸ்.காட்சன் சாமுவேல், ஜி.கலாவதி, உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: