அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்

சென்னை: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும்  கண்காணிப்பாளர் மீது அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்  கடந்த 3ம் தேதி கடுமையான வன்முறை தாக்குதல் நடத்தியதாக கூறி அரசு பணியாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து துறை கமிஷனர் அலுவலகம் முன்பு சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘வன்முறை தாக்குதல் நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: