×

கோட்டாறு சாலை உள்படகனிமங்கள் இன்றி ரூ. 305 கோடி பணிகள் தேக்கம்

நாகர்கோவில்: குமரியில் ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் இன்றி ரூ. 305 கோடி மதிப்பிலான பணிகள் தேங்கி கிடக்கின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், மக்களின் அவசியம் கருதி சாலைகள் சீரமைத்தல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைத்தல், சிறுகுறு பாலங்கள் அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி  மாநகராட்சி பகுதிகளில் கோட்டாறு கேப் சாலை உள்பட a50 கோடியிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் a50 கோடி மதிப்பீட்டிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் a105 கோடியிலும், பேரூராட்சிகளில் a50 கோடிகளிலும் பணிக்கான உத்தரவு வழங்கி பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த பணிகளுக்கான ஜல்லி கற்கள், எம்.சான்ட் உள்பட கனிம பொருட்கள் நெல்லையிலிருந்து ஒரு மெட்ரிக் டன் a350க்கு கிடைத்து வந்தது. இந்நிலையில், நெல்லையில் குவாரி விபத்தை தொடர்ந்து ,குவாரிகளுக்கு நெல்லை கலெக்டர் தடை விதித்துள்ளதை அடுத்து, குமரியிலும், கனிம பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு பணிகளும் முடங்கியுள்ளது. கோட்டாறு கேப் சாலை உள்பட மாநகரின் பல சாலை பணிகள் பாதியில் நிற்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ரதவீதிகள் சீரமைப்பு பணியும் முடங்கியுள்ளன.

இந்நிலையில், குமரியில் சித்திரங்கோட்டில் கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இங்கிருந்து, பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்த விலையான கனமீட்டர் (க்யூபிக் மீட்டர்) a650க்கு கனிமங்கள் கன்னியாகுமரி ரதவீதிகளை சீரமைத்தல் மற்றும்  அரசு பணிகளுக்கு வழங்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதன்படி கன்னியாகுமரி ரதவீதிகள் சீரமைத்தல் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு கனிமங்கள் வழங்கிய நிலையில், திடீரென அரசு பணிகளுக்கு கனிமங்கள் வழங்குவதை குறிப்பிட்ட நிறுவனம் நிறுத்தி விட்டது. இதனால், அனைத்து பணிகளும் கற்கள் போன்ற பொருட்கள் இன்றி பாதியில் நிற்கின்றன.

 இதுபற்றி அரசு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது, கலெக்டர் உத்தரவுப்படி சித்திரங்கோட்டில் உள்ள குவாரியில் கனிமங்கள் தந்தனர். தற்போது நெல்லையில் இருந்து கனிமங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், குமரி குவாரியில் கனிமங்களை கனமீட்டர் a2000ம் வரை  கேரளாவில் இருந்து வாங்கி செல்கின்றனர். இதனால், கலெக்டர் உத்தரவுப்படி எங்களுக்கு கனிமங்கள் தராமல் கேரளாவிற்கு விற்பனை செய்கின்றனர். எனவே கலெக்டர் தலையிட்டு, அரசே நேரடியாக கனிமங்களை கொள்முதல் செய்து, அரசு நிர்ணய விலையில் எங்களுக்கு வழங்க வேண்டும். தற்போது குமரி குவாரியில் உள்ள விலைக்கு கனிமங்களை வாங்கி பணி செய்தால், 50 சதவீதம் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே கலெக்டர் நேரடியாக இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Tags : Kotaru Road Incl , Kottaru Road Rs. 305 crore works stagnant
× RELATED ஓசூர் அருகே கழிவுநீர் லாரியின் மீது...