திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் மகள் திருமணம்; அமைச்சர் வாழ்த்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் மகள் திருமண வரவேற்பில் அமைச்சர், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அமைப்பாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஜெ.சங்கர் - ச.விஜயகுமாரி ஆகியோரின் மகள் ச.அனுராதாவுக்கும் சென்னை வளசரவாக்கம் வி.மா.சபாபதி - ச.ராணி தம்பதியின் மகன் ச.உமாபதி சங்கர் ஆகியோரின் திருமண வரவேற்பு பூந்தமல்லியில் நடைபெற்றது.

திருவள்ளூர் நகர செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் ஜெ.சேகர், ஜெ.சம்பத், டி.டி.சரவணன், டி.டி.சதீஷ்குமார், ஜெ.எஸ்.தியாகராஜன், ஜெ.எஸ்.அஜீத்குமார், ஜெ.எஸ்.அபி (எ) திலீப்குமார் ஆகியோர் வரவேற்றனர். நகர அவைத்தலைவர் தே.தேவன், நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், நகர நிர்வாகிகள் கோவி.மனோகரன், ராஜேஸ்வரி கைலாசம், இ.குப்பன், வே.ரமேஷ்பாபு, முன்னாள் நகரமன்ற தலைவர் பொன்.பாண்டியன், ஏ.பித்தன், த.எத்திராஜ், ஆர்.சாரதி, எம்.எஸ்.சிவராமகிருஷ்ணன், ஜி.கோவிந்தராஜ்,இ.பி.போஸ், அரண் அன்பு, ஜெயபுகழேந்தி, ஜி.பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

பால்வளத்துறை அமைச்சரும் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி.சா.மு.நாசர், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ஜோசப் சாமுவேல், நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், எஸ்.கே.ஆதாம், சரஸ்வதி சந்திரசேகர், ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், மு.நாகன், காயத்ரி தரன், ஒன்றிய, நகர செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், டி.கிறிஸ்டி, எஸ்.மகாலிங்கம், க.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், ஆர்.ஜெயசீலன், ரவீந்திரா, வினோத் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். நகர இளைஞரணி அமைப்பாளர் அ.பவளவண்ணன் நன்றி கூறினார். 

Related Stories: