நாமக்கல்லில் திமுக மாஜி எம்எல்ஏ மரணம்

நாமக்கல்: நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் கே.கே.வீரப்பன் (72). இவர் கடந்த 1996 முதல் 2001 வரை கபிலர்மலை சட்டமன்ற தொகுதியில் இருந்து திமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவிகளையும் கே.கே.வீரப்பன் வகித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, இவர் கபிலர்மலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகள் காங்கிரசில் மாவட்ட தலைவராக பணியாற்றினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கே.கே.வீரப்பன் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இவரின் உடலுக்கு நகர பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள்அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: