×

பெட்ரோல் வரிகளை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக இளைஞரணி செயலாளார் அன்புமணி டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்.கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயர்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும்….

The post பெட்ரோல் வரிகளை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annepamani ,Chennai ,Pamaka Yuyanirani ,Annamurani ,Twitter ,Tamil Nadu ,Kodicanal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...