நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும் தமிழ்நாட்டில் மின் விநியோகம் சீராக உள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும் தமிழ்நாட்டில் மின் விநியோகம் சீராக உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அச்சமயம் நிலுவையில் உள்ள மின் இணைப்பு திட்டங்களை விரைவில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில்  காற்றாலை, ஒளி மின் உற்பத்தியில் ஓரிரு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலிடம் பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: