எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க ஓபன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தல்?.. தலைமைப் பதவியை விட்டுத் தருவாரா ஓபிஎஸ்?

சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. வரும் 23ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி தரப்பு திட்டத்தை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பு ஆயத்தமாகி வருகிறது. பழனிசாமி, ஓபிஎஸ் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராவதால் அதிமுகவில் மீண்டும் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழுவில் தேர்வு செய்ய அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் கையெழுத்திட்டால் மட்டுமே ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேறும். ஒற்றைத் தலைமைக்காக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுத் திருமதி ஓபிஎஸ் இடம் பழனிசாமி ஆதரவாளர்கள் வலியறுத்தி வருவதாக கூறப்படுகிறது. பழனிசாமி தரப்பு நெருக்கடிக்கு பணிந்து போகக்கூடாது என்று ஓபிஎஸ் இடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் ஓபன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகின்றனர். காலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் தற்போது ஓபன்னீர்செல்வத்துடன் சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்துள்ளார்.

Related Stories: