×

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பயிற்சிப்பாசறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சிப்பாசறை நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், முன்னாள் எம்பிக்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன் எம்எல்ஏ, விவசாய அணி துணை செயலாளர் டேம்.

வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், தொழிலதிபர் கேவிஎஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இதில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், கலைஞரின் மொழிக்கொள்கை என்ற தலைப்பிலும், தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, திமுகவின் மாநில சுயாட்சி என்ற தலைப்பிலும் பேசினர்.

இதில், திராவிட இயக்க தமிழ் பேரவை பொது செயலாளர் பேராசிரியர் வீரபாண்டியன் பங்கேற்று, கலைஞரின் சமூக நீதிப்போர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, கோவிந்தராசன், சாந்தமூர்த்தி, வசுந்தரசு, நரசிம்மன், செல்வம், சாமிநாதன், பேரூர் செயலாளர்கள் பாபுசிவக்குமார், பாலன், பாபு, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் மகேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், மற்றும் ஒன்றிய தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Eastern District Kanjagam , Workshop on behalf of East District DMK
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...