×

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: சாதனையுடன் ஒலிம்பிக் சீசனை தொடங்கி அசத்தல்..!

ஹெல்சின்கி: பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த நீரஜ் சோப்ரா. இவர் பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். இதில் 88.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார்.

கடந்த ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தேசிய அளவில் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக் சீசனை வெள்ளிப்பதக்கத்துடன் நீரஜ் சோப்ரா தொடங்கியுள்ளார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரத்திற்கு பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் தங்கப்பதக்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரம் எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.

Tags : Neeraj Chopra ,Olympic , New record holder Neeraj Chopra: Stunning start of the Olympic season with a record ..!
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...