×

ஆர்‌‌.கே.பேட்டையில் ஜமாபந்தி நிறைவு விழா

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கடந்த 8ம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, 6 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 629 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில், மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு தகுதியானவர்கள் தேர்வு செய்து 207 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், கிராம நத்தம் பட்டா நகல், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்க தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதில் வட்டாட்சியர் தமயந்தி, தனி வட்டாட்சியர் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் திலகவதி ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.செங்குட்டவன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் சி.எம்.ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரமிளா வெங்கடேசன், தனலட்சுமி காளத்தீஸ்வரன், அம்மு சேகர், செல்வி சந்தோஷ், சிவக்குமார், உமாபதி உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags : Jamabandhi Closing Ceremony ,RK Pettai , Jamabandhi Closing Ceremony at RK Pettai
× RELATED ஆதிதிராவிட மக்களுக்கு பாறை புறம்போக்கு நிலம் வழங்க கோரிக்கை