ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம்: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி  நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஊர்மிளா, ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வரதன் துணை தலைவர் விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணி ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. எந்த ஒரு குடும்பத்திலும் பள்ளி செல்லா சிறுவர், சிறுமியர் இருக்கக்கூடாது.  எனவும், பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அரசு செய்யும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்திருந்தது.

Related Stories: