ஐயப்ப சுவாமிகள் நினைவாக பௌர்ணமி அன்னதானம்

மதுராந்தகம்: திருவேற்காடு ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் நினைவாக பௌர்ணமி அன்னதானம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி வெங்கடேசபுரம் உள்ளது. இங்கு உள்ள திருவேற்காடு ஸ்ரீலஸ்ரீஐயப்ப சுவாமிகள் நினைவாக பௌர்ணமி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வெங்கடேசபுரத்தில் திருவேற்காடு ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் நினைவாக அதன் அறக்கட்டளையின் வெங்கடேசபுரம் நிர்வாகி ரா.முருகன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஏழை, எளியவர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்சியில், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் வி.டி.ஆர்.வி.எழிலரசன் மற்றும் இராவத்தநல்லூர் சரவணன், விநாயகம், வெங்கடேசபுரம் பொன்னுசாமி, பாலமுருகன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: