பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வரதையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், கடந்த ஜனவரி  முதல் தங்களுக்கு  சேர வேண்டிய 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்க கோருதல், தமிழக அரசு தேர்தல் அறிக்கையின்போது, 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 விழுக்காடு கூடுதலாக ஓய்வூதியம் வழங்குவதாக உறுதிமொழி அளித்தது. அதன் அடிப்படையில், கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அனைத்து வியாதி, அறுவை சிகிச்சை அனைத்து மருத்துவமனைகளிலும் பெற வழிவகை செய்தல், பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு இலவச பயண சலுகை வழங்குதல், ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் ரூ 1 லட்சம் வழங்குதல், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முறையாக அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள்  கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: