×

சங்கராபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்: சங்கராபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேச முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சங்கராபுரம் கிராமத்தில் சுயம்பு தேச முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வாணவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடந்தது. விழாவிற்கு, முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் சிவாச்சாரியார்களால் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோயில் கோபுர கலசங்கள் மீதும் அம்பாள் மீது ஊற்றப்பட்டது. அப்போது, கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் இட்டு தங்களின் நேர்த்தி கடனை கற்பூர தீப ஆராதனைகள் காண்பித்து நிறைவேற்றினர். மேலும், விழாக்குழுவினர் மூலம் புனிதநீர் கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இந்த கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமமக்கள் வந்து இருந்து தங்களின் வேண்டுதலையும் நேர்த்தி கடனையும் செலுத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவினை சங்கராபுரம் பொதுமக்கள் மற்றும் கோயில் திருப்பணி குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Tags : Mariamman Temple ,Kumbabhishekam ,Sankarapuram , Mariamman Temple Kumbabhishekam in Sankarapuram village
× RELATED புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்