ஒரு எம்எல்ஏ மதிப்பு எவ்வளவு?

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 4120 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி எம்எல்ஏ மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்குப்படி ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு மாறும்.தற்போது ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு = ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை/மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் சட்டசபை உறுப்பினர்கள் x 1000

* உபி தான் டாப் தமிழகத்திற்கு 2ம் இடம்

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட உபி எம்எல்ஏக்களுக்கு தான் எப்போதும் அதிக மதிப்பு. அங்கு 403 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களது ஒரு வாக்கு மதிப்பு 208. அவர்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவின் மதிப்பு 176. அதே இரண்டாம் இடம் ஜார்க்கண்டிற்கும் கிடைத்து இருக்கிறது. அங்கு 81 எம்எல்ஏக்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு 176ஆக இருக்கிறது. அதன்பின் மகாராஷ்டிராவில் உள்ள எம்எல்ஏவுக்கு 175, பீகார் எம்எல்ஏவுக்கு 173, ஆந்திரா எம்எல்ஏவுக்கு 159 என்ற வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: