தன் சஞ்சய் காப்பீட்டு திட்டம் எல்ஐசி நிறுவனம் அறிமுகம்

மும்பை: தன் சஞ்சய் என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  எல்ஐசி நிறுவனம், தன் சஞ்சய் என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. பங்குச்சந்தை சாராத, லாபத்தில் பங்கேற்காத, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீடு திட்டமாக இது உள்ளது. உத்திரவாத வருமானத்துடன் குடும்பத்தை பாதுகாக்கும் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். உத்திரவாத வருவாய் பலன் கொண்ட இந்த காப்பீடு, பாலிசிதாரர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு சிறந்த நிதி ஆதாரமாக திகழும்.

 ஏற்கெனவே பாலிசிதாரர் தேர்வு செய்ததற்கு ஏற்ப மொத்த பணப்பலனாகவே, 5 ஆண்டுகளுக்கு தவணை முறையிலோ அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இதுதவிர, பாலிசி காலத்தில், அவசர செலவுகளுக்கு கடனாக பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. பாலிசிதாரரின் தேர்வு, பிரீமியம் தொகை ஆகியவற்றுக்கு ஏற்ப ரூ3.3 லட்சம், ரூ2.5 லட்சம் மற்றும் ரூ22 லட்சம் கிடைக்கும். பாலிசிதாரரின் விருப்பத்தேர்வு, காப்பீடு தொகைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும். மேலும் விவரங்களுக்கு எல்ஐசி இணையதளம் அல்லது அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: