நிதிசார் உள்ளடக்கலில் உள்ள சவால் என்ன? ஐஐடி மெட்ராஸ் ஆய்வறிக்கை வெளியீடு

சென்னை: ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் மற்றும் ஐஐடிஎம் இன்குபேஷன் செல் ஆகியவை ஒருங்கிணைந்து ‘நிதிசார் உள்ளடக்கலில் சவால்கள்’ என்பது மீதான ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டன. ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் மற்றும் ஐஐடிஎம் இன்குபேஷன் செல் ஆகியவை ஒருங்கிணைந்து,  நிதிசார் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்நிலையில், டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோபால் னிவாசன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி மற்றும் ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், ஐஐடிஎம் இன்குபேஷன் செல் தலைவர் அசோக் ஜூன்ஜூன்வாலா ஆகியோர் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

குறைந்த வருவாய் உள்ள பிரிவைச் சேர்ந்த மக்களும் மற்றும் மூத்த குடிமக்களும் முறைசார்ந்த நிதிசார் அமைப்புகளிலிருந்து முழு அளவிலான நிதிசார் சேவைகளை அணுகிப் பெறுவதில் பல நேரங்களில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய தடைகள் மற்றும் சிரமங்கள் சிலவற்றை இந்த ஆய்வறிக்கை கோடிட்டு காட்டுகிறது. இவைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், ஐஐடிஎம் இன்குபேஷன் செல் தலைவர் அசோக் ஜூன்ஜூன்வாலா கூறியதாவது: 18 வயதை பூர்த்தி செய்த 90 கோடி நபர்களை உள்ளடக்கிய மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டில் சிறிய விழுக்காட்டு அளவிலான நபர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை  செய்திருக்கின்றனர்.

நிதிசார் சேவைகள் துறையில் சாதனைகளை நாம் செய்திருக்கின்றபோதிலும்கூட இந்திய சமூகத்தில் ஒரு பெரிய பிரிவினர் இன்னும் நிதிசார் உள்ளடக்கல் சமத்துவமின்மைகளினால் சிரமப்பட்டு வருகின்றனர். உள்ளடக்கலுக்கான நிதி தொழில்நுட்ப பிரிவில் தலைவராக இந்தியாவை ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்ட செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த வருவாய் பிரிவினரால் எதிர்கொள்ளப்படுகிற சவால்கள் மீது ஒரு விரிவான பகுப்பாய்வை எங்கள் குழுவினர் செய்திருக்கின்றனர்.அத்துடன் அவர்களை நிதிசார் சேவைகளைப் பெறுமாறு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: