சென்னை குடிநீர் வாரிய எம்.டி. கிர்லோஷ் குமார் பொறுப்பேற்பு

சென்னை: சென் னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனராக கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக விஜயராஜ் குமார் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு தொழிலாளர் நலத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றார்.

அவருக்கு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2001ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட கிர்லோஷ் குமார், 2007ம் ஆண்டு ராமநாதபுரம் கலெக்டராகவும், 2009ம் ஆண்டு திண்டுக்கல் கலெக்டராகவும் பதவி வகித்தார். அதன் பின்பு பல்வேறு நிலைகளில் பணியாற்றி தற்போது சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: