ஆளுநர் பணியை விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் வேலையை பார்க்கிறார் ஆர்.என்.ரவி; முத்தரசன் குற்றச்சாட்டு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: கம்யூனிஸ்ட்கள் சுவடே இல்லாமல் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறுகிறார். ஆக.9ம் தேதி லட்சக்கணக்கான பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி திருப்பூரில் நடைபெ ற உள்ளது. அந்த பேரணியை அண்ணாமலை நேரம் ஒதுக்கி பார்த்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுவடு இருக்கிறதா இல்லையா என புரிந்து கொள்ளட்டும். திருப்பூர் பேரணி ‘‘மக்கள் விரோத மோடி அரசே வௌியேறு’’ என்ற முழக்கத்துடன் நடைபெறும்.

பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பணி புரியும் தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு செய்யக்கூடிய  நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும். திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழமை கட்சியாக நீடிக்கும்.  தமிழக சட்ட பேரவையில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.  ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் வேலையை பார்க்கவில்லை. ஆர்எஸ்எஸ் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: