×

தலைமை செயலக அதிகாரியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

பெரம்பூர்: கொளத்தூர் சிவ இளங்கோ சாலையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (55). தலைமை செயலகத்தில் இணை செயலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 வருடங்களாக கொளத்தூர் ஜவகர் நகரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் இவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு நபர், உங்களது வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும், என்று கூறி வங்கி கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்டை வாங்கியுள்ளார். அதன்பிறகு 2  தவணைகளாக இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.88 ஆயிரம் எடுக்கப்பட்டதாக, எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சத்யநாராயணன் இதுகுறித்து பெரவள்ளூர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யாரேனும் அக்கவுன்ட் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் கொடுக்க வேண்டாம் என எவ்வளவோ விழிப்புணர்வை வங்கி சார்பில் தெரிவித்தாலும் தொடர்ந்து பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றத்திற்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது.  …

The post தலைமை செயலக அதிகாரியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Sathyanarayanan ,Siva Ilango Road, Kolathur ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் இருந்து சென்னை...