×

பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடக்கும் மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். இந்த மாதம் துவக்கத்தில் இருந்து வெளியூர் மாடுகள் வரத்து குறைவாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைந்ததாலும் விற்பனை மந்தமானது. இதனால் மாடுகள் குறைவான விலைக்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக மாடுகள் விற்பனை ஆகாமல் சந்தையிலேயே கட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று நடந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. குறிப்பாக ஆந்திராவில் இருந்து எருமைகள் வரத்து அதிகளவில் இருந்தது. கேரள வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வந்ததால், இன்று விற்பனை விறுவிறுப்பு அடைந்தது. கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் இன்று ஒரேநாளில் ரூ.2.10 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi , Pollachi Market, Cattle Sale,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!