சென்னை: அமைதியான போராட்டங்களைக் கூட வன்முறை சம்பவங்களாக பாஜக அரசு மாற்றி வருகிறது என இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலர் ஜோஷ்வா ஜெரார்ட் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ பாஜகவை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் போராடும். எரிபொருள் விலை உயர்வை திசை திருப்ப காங். தலைவர்கள் மீது பொய் புகார் கூறி சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக ஏவுகிறது.