×

பழனி கோயிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு ரத்து: பராமரிப்பு பணிக்காக நிறுத்தம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை வரும் 16-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால்  நவபாஷாணத்தை கொண்டு செய்யப்பட்ட முருகன் சிலை கோவில் மூலவராக உள்ளது.  அறுபடை வீடுகளில் ஒன்றான  பழனி கோவிலில் முருகன் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார். பழனி மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ரோப்கார், வின்ச் ஆகிய வசதிகள் உள்ளன.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் வின்ச் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை சேவை நிறுத்தம் செய்யப்படுகிறது.ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கமாக நடைபெற்று வரும் நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக தற்போது இச்சேவை நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Palani Temple ,Temple administration , Palani temple, rope car, service, cancellation, maintenance work, temple administration
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...