×

ஆவடி, பட்டாபிராமில் ரூ.22 லட்சத்தில் 7 உயர்கோபுர மின் விளக்குகள்: அமைச்சர் சா.மு.நாசர் இயக்கிவைத்தார்

ஆவடி: ஆவடி, பட்டாபிராமில் ரூ.22 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 7 உயர்கோபுர மின்விளக்குகளை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கிவைத்தார். ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் முக்கிய இடங்களில் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்,  சமூகவிரோத செயலை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையேற்று ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆவடி 41வது வார்டு என்.எம்.சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலை சந்திப்பு,  44வது வார்டு பெரியார் நகர் மருத்துவமனை வளாகம், பெரியார் நகர் மின் மயானம் வளாகம், 38வது வார்டு தேவி நகரில் உள்ள முஸ்லிம் மயான வளாகம், 18வது வார்டு பட்டாபிராம் பாபு நகர் அண்ணா பிரதான சாலை, பாபு நகர் மின் மயானம்  உள்ளிட்ட இடங்களில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 7 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்குகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உயர்கோபுர மின் விளக்குகளை இயக்கி வைத் தார்.

Tags : Awadi ,Pattabram ,Minister ,b.k Nassar , Tower Lights, Minister S. M. Nasser,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!