புழல் ஏரியில் விளக்கு எரியாததால் வாக்கிங் செல்பவர்களிடம் வழிப்பறி: போலீசார் ரோந்துவர கோரிக்கை

புழல்: புழல் ஏரி மதகில் இருந்து புழல் கண்ணப்பசாமி நகர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதால் புழல், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி  சென்று வருகின்றனர். மக்களின் வசதிக்காக கரையோரமாக மின்சார கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் உள்ளதால் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து வழிப்பறி உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

இதனால் மாலை 6 மணிக்கு மேல் நடைபயிற்சி செல்ல பயப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து புழல் ஏரியை வேடிக்கை பார்க்க வருகின்ற காதல்ஜோடிகளும் வாக்கிங் செல்லும்போது சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், செயின் ஆகியவற்றை பறித்து தப்பிவிடுகின்றனர்.

ஏரிக்கரையில் உள்ள கம்பத்தில் மின்விளக்கு அமைக்கவேண்டும். ஏரியின் மையப்பகுதியில் காவல் உதவி மையம் அமைத்து சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தில் செங்குன்றம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என நடை பயிற்சி மேற்கொள்வோர் அமைப்பு சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: