அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 100நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்-அதிகாரி ஆய்வு

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நூறு நாள் பணி திட்டத்தில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றது. இதனைவட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஆய்வு செய்தார்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில்நூறு நாள் பணி திட்டத்தில் சாலை ஓரங்கள் சரிபடுத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது விவசாய தோட்டங்களில்முருங்கை உள்ளிட்ட மரங்களுக்கு வரப்பு அமைத்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளும் அந்தந்த தோட்ட உரிமையாளர்களின் விருப்vத்திற்கிணங்க தோட்டங்களில் வேலை செய்ய பண ஒதுக்கீடு செய்யப் படுகின்றது.

இதன்படி அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நாகம்பள்ளி, கொடையூர், புங்கம் பாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள் பணி திட்டத்தில்விவசாய தோட்டங்களில் முருங்கை உள்ளிட்ட மரங்களுக்கு வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடை பெற்றுவருகின்றது. இதனை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் புவனேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

Related Stories: