தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்ததூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாடுகளுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: