இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய ராணுவ முறையை அறிமுகம் செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய ராணுவ முறையை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். பாதுகாப்புத்துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை ஒன்றிய அரசு உருவாக்கியது. Tour Of Duty என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அமைக்கப்படுவார்கள். அக்னிபத் முறையில் சேரும் வீரர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் பணியில் இருப்பார்கள். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நம் இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது புதிய தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிக்கவும், உடற்பயிற்சி வழங்கவும் இது வழிவகை செய்யும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: