திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் அகற்றப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு-ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா...

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் அகற்றப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள விரிவாக்கப் பகுதிகளில், குப்பைகள் அகற்றப்படாதால், சாலையோரம் குவிந்து கிடக்கிறது. கேசவன் நகர் அருகில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தொட்டியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இவைகளை நீண்ட நாட்களாக அகற்றப்படாததால், குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. காற்று அடிக்கும் காலங்களில் குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகளின் மீது விழுகிறது. மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்கின்றன. இதனால், அவைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: