மஞ்சக்குளம் அரசுப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி

கம்பம் : கம்பம் அருகே, மஞ்சக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடிப்படை கணிதத்திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ என்ற கல்வித்திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்காக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று எண்ணும் எழுத்தும் கல்வித்திட்ட துவக்க விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், நேற்று கம்பம் அருகே உள்ள மஞ்சக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில், கம்பம் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி எண்ணும், எழுத்தும் நிகழ்வினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை பாலமீனா, ஆசிரியர் சிவாஜி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: