திருவண்ணாமலை அருகே அம்மன் கோயில் எதிரே பச்சிளம் ஆண் குழந்தை வீச்சு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே ஆதரவற்ற நிலையில் கோயில் எதிரில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் நேற்று, பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியின் மீது கிடத்தப்பட்டு இருந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கர், அசோக்குமார் ஆகியோர், ஆண் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருவண்ணாமலை தாலுகா போலீசார், பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை ஆதரவற்ற நிலையில் கோயிலில்  விட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: